• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று மாலை இடலாக்குடி பட்டாரியர் முதாய மக்களால் நெய்து எடுத்துவரப்பட்ட கொடிப்பட்டம், ஊர்வலமாக சுசீந்திரம் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலில் ஒப்படைக்கபடுகிறது. மூன்றாம் நாள் திருவிழாவில் கோட்டார் விநாயகர், குமார கோவில் மற்றும் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் தாய் தந்தையான சிவன், பார்வதியை சந்திக்கும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டம் ஏழாம் நாள் திருவிழாவில் இரவு கைலாச பர்வத வாகன பவனியும், ஒன்பதாம் நாள் விழாவான ஜனவரி 5ம் தேதி காலையில் தேரோட்டமும் நடக்கிறது. இரவு தாய், தந்தையரான சிவன், பார்வதி ஆகியோர் தங்களது குழந்தைகளான கோட்டாறு விநாயகர், குமார கோவில் மற்றும் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோரை பிரிய மனமில்லாமல் மூன்று முறை முன்னும், பின்னுமாக சென்று மூன்றாவது முறை வேகமாக கோவிலுக்குள் ஓடிச்செல்லும் சிறப்புமிக்க சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பத்தாம் நாள் இரவு ஆராட்டு நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.