அறம் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
அறம் சமூக நல அறக்கட்டளையின் 8ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இத்தகவலை அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் என்.ராஜசேகர் தெரிவித்துள்ளார்
போதையும் வேண்டாம்,புற்று நோயும் வேண்டாம் என்று சமூக நலன் சார்ந்து இயங்கும் அமைப்பு அறம்சமூக நல அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின் சார்பாக சமூக நலன் சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
வருகிற ஜூன் 26 மதுரையில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிநடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான முன்பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 10 ஆகும்.
ஆடவர் ,மகளிருக்கு 21கிமீ,10கிமீ,5கிமீ என மூன்று ஒட்ட ப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வு குறித்து மேலும்தகவல் தெரிந்து கொள்ள 8337678173,9751374647,9003868880,8940047203 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.