நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெள்ளதி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் எல்லையோர பழங்குடியினர் கிராமங்களில் மாவோயிஸ்ட் குறித்து விழிப்புணர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மஞ்சூர் அருகே உள்ள பெள்ளத்தி கிராமத்தில் சனிக்கிழமை அன்று மாவோயிஸ்ட் எல்லோர விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்த பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் லோகநாதன் தலைமையில் குந்தா வட்டாட்சியர் இந்திரா மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் குந்தா ரேஞ்சர் சீனிவாசன் கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர்கள் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் பெள்ளத்தி பழங்குடி மக்கள் கலந்து கொண்டு தங்களது கிராமத்தில் சிதிலமடைந்துள்ள வீடுகள் சீரமைத்து தர வேண்டும் குடியிருப்பு பகுதியில் தடுப்புச் சுவர் குடிநீர் வசதி கழுவினர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து மனு வழங்கினார்கள். அனைத்து வசதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். இக்கூட்டத்தில் குந்தா வருவாய் ஆய்வாளர் மணிமேகலை கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்