• Thu. Mar 28th, 2024

மதுரையில் சிஐடியு தொழிலாளர் சங்கம் நடத்தும் மினி மாரத்தான் போட்டி

ByKalamegam Viswanathan

Feb 12, 2023

மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு போக்குவரத்து மதுரை சிஐடியு தொழிலாளர் சங்கம் நடத்தும் மினி மாரத்தான் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பயன்படுத்தவும் சாலைகளில் வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினிமரத்தன் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு பிரிவுகளில் நடைபெற்றது.


மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியானது மதுரை திருநகர் மூன்றாவது பஸ் .நிறுத்தம் தொடங்கி பழங்காநத்தம் பைபாஸ் சாலை வரை நடைபெற்றது.மினி மாரத்தான் போட்டியில் முதலில் ஆண்கள் பிரிவில் இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை என 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பந்தய தூரத்தை ஓடி வந்தனர். இரண்டாவது பெண்கள் பிரிவில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மேலும் மினி மரத்தான் போட்டியில் ஆண்களுக்கான முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் இரண்டாம் பரிசாக ரூபாய் 8 ஆயிரம் மூன்றாம் பரிசாக ரூபாய் 5 ஆயிரம் மற்றும் நான்கு முதல் பத்து இடங்களுக்குள் வருபவர்களுக்கு ஆறுதல் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.பெண்களுக்கான மினி மராத்தான் போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 6 ஆயிரம் 2வது பரிசாக 4 ஆயிரம் 3வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் 4 முதல் 10 இடத்தில் வரும் பெண்களுக்கு தலா ரூபாய் 500 பரிசாக வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *