மத்திய அரசின் பட்ஜெட், 3 சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மக்கள் விரோத போக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருவதாக குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கட்சியினர் நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சிபிஐ (எம் )., சிபிஐ, சிபிஐ ( எம்.எல் ) உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிலிருந்து கண்டன கோசங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த மார்க்சிஸ்ட் கட்சியினர்., தபால் நிலையம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு மறியல் செய்தனர்.

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.