• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதிய கல்விக் கொள்கையை பலரும் முழுமையாக படிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என் .ரவி

ByA.Tamilselvan

May 30, 2022

புதிய கல்விக் கொள்கையை பலரும் முழுமையாக படிக்கவில்லை.பல நல்ல அம்சங்கள் உள்ளாதால் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில், பலவிதமான யோசனைகளை மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததை பார்த்தேன், மகிழ்ச்சியாக இருந்தது.
நம்மிடம் தற்போதுள்ள கல்வி முறையைப் பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். இதுநாள் வரை நாம் தேசத்தை பார்த்த பார்வை சற்று சரியாக இல்லை என்று சொல்ல வேண்டும். ஒரு பிராந்திய, புவியியல் அமைப்பு சார்ந்த பிரதேச உள்ளுணர்வோடு கல்வி கொள்கையை அணுகியிருக்கிறோம்.கடந்த பல ஆண்டுகளாக நாம் நம்மிடையே உள்ள பிரிவினைகளையே அதிகமாக பார்த்திருக்கிறோம். பல்வேறு வேறுபாடுகள், பிரிவினைக் கருத்துகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த அனைவரும் முன்வர வேணடும். திறந்தநிலை பல்கலைக்கழகம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளன. புதிய கல்விக் கொள்கையை பலரும் முழுமையாக படிக்கவில்லை. படிப்பை பாதியில் கைவிட்டாலும் மீண்டும் தொடர புதிய கல்விக்கொள்கையில் வாய்ப்பு உள்ளது.