• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குன்னூர் அதிகரட்டி கிராமத்தில் மனு நீதி நாள் , மக்கள் தொடர்பு திட்டம்

குன்னூர் வட்டம், அதிகரட்டி கிராமம், காட்டேரி அணை மைதானத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மனு நீதி நாள் மற்றும் மக்கள் தொடர்பு திட்டம் சிறப்பாக நடைபெற்றது.


முகாமில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு பழங்குடியின சாதி சான்றும், 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும், முதலமைச்சரின் விபத்து நிவாரணத் திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு ரூ.2,00,000/-ற்கான நலத்திட்ட உதவிகளும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை என ரூ.14,49,500/-ற்கான நலத்திட்ட உதவிகளும்,தோட்டக்கலைத் துறையின் மூலம் 101 பயனாளிகளுக்கு ரூ.11,02,180/-ற்கான மானியத்துடன் கூடிய நலத்திட்ட உதவிகளும், மாவட்ட வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் 05 பயனாளிகளுக்குரூ. 1,10,600/-ற்கான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் மூலம் 01 பயனாளிக்கு ரூ.8,000/-ற்கான உதவித்தொகையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.7,900/-ற்கான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 02 பயனாளிகளுக்கு ரூ.11,000/-ற்கான நலத்திட்ட உதவிகளும், முன்னோடி வங்கி மூலம் 07பயனாளிகளுக்கு ரூ.20,50,000/ற்கான வங்கிக்கடனும், 10 பயனாளிகளுக்கு மக்களைத்தேடி மருத்துவ உதவிகளும் என இச்சிறப்பு முகாமில் ஆக மொத்தம் 242 பயனாளிகளுக்கு ரூ.49,39,180/ற்கான நலத்திட்ட உதவிகள் நீலகிரி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.