• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

துணிவு-அடுத்த அப்டேட் கொடுத்த மஞ்சு வாரியார்

ByA.Tamilselvan

Nov 27, 2022

துணிவு படம் குறித்து நடிகை மஞ்சு வாரியர் தற்போது பகிர்ந்துள்ள அப்டேட் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ரிலீஸிற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், துணிவு படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியார் அசத்தலான அப்டேட் ஒன்றை தற்போது கொடுத்துள்ளார். மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தமிழில் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ படத்தின் மூலம் அறிமுகமான மஞ்சு வாரியர், இதனைத் தொடர்ந்து துணிவு படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடித்துள்ளார்.
அதே போல, சமீபத்தில் துணிவு படத்தின் டப்பிங்கில் கலந்து கொண்டது குறித்தும் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்த மஞ்சு வாரியார், இந்த படத்தில் பாடல் ஒன்றை பாடி உள்ளது குறித்து தற்போது பகிர்ந்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மஞ்சு வாரியார், “ஜிப்ரானுக்காக பாடியதில் மகிழ்ச்சி. துணிவு படத்தின் ஒரு இன்ட்ரெஸ்டிங் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம் ” என குறிப்பிட்டுள்ளார்.
துணிவு படத்தில் வரும் Chilla Chilla பாடல் குறித்து சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ள நிலையில், தற்போது மஞ்சு வாரியரும் பாடல் பாடியுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.