• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி பட டிரைலர்

ByA.Tamilselvan

Nov 26, 2022

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள டிஎஸ்பி டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
விஜய் சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘டிஎஸ்பி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.