• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
உதகமண்டலம் NCMS அருகில் உள்ள மண்டபத்தில் தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி செல்வி. பி.பிரதீஷா கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும், கவிதைப் போட்டியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி தி. ஸ்ரீமதி மூன்றாமிடம் பெற்றார். இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் .ப.அம்ரீத் மாணவிகளுக்கு பரிகளை வழங்கினார்.மாணவிகளை பள்ளி பொருப்புத்தலைமை ஆசிரியர் பீ.ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார். பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பள்ளி மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டி வருகின்றனர்