• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஐஸ்வர்யாராய் நிபந்தனைக்கு பணிந்த மணிரத்னம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
பலரும் முயற்சித்து முடியாமல் போன கதை இது தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின்கனவுத் திரைப்படமாகஇதுஉருவாகிவருகிறது.

2022 ஏப்ரலுக்கு பின் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை.பொன்னியின் செல்வனில் முக்கிய ரோலில் நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய் . இவரின் காட்சிகள் சில படமாக்க இருக்கிறதாம். ஏன் தாமதம் என்று விசாரித்தால், இரண்டு நாட்கள் நீருக்குள் படப்பிடிப்பு எடுக்க வேண்டியிருக்கிறதாம்.

படத்தில் ஆற்றிலோ அல்லது கடலிலோ நடப்பது மாதிரியான காட்சியாக இருக்கும். அதற்கான ஷூட்டிங்கை பொதுவாக நீச்சல் குளங்களில் நீருக்கு கீழே படம் பிடிப்பார்கள். இந்த ஷூட்டிங்கிற்கு ஐஸ்வர்யா ராய் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார்.


என்னவென்றால், இரண்டு நாட்கள் முழுமையாக நீருக்குள் நடிக்க வேண்டியிருப்பதால், நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருக்க முடியாது. அதனால், நீரினை ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் பராமரிக்க வேண்டும். அதாவது, மிதமான சூட்டுடன் நீர் இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயின் நிபந்தனையை சாத்தியப்படுத்த வேண்டுமென்பதற்காக படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகிறதாம். விரைவிலேயே, ஐஸ்வர்யா ராய் கேட்டபடியே படப்பிடிப்பும் நடக்கும் என்கிறார்கள்.