மதுரை மாவட்டம் சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் மண்டலை பூஜை விழா டிசம்பர் 26 வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் விமல் சக்கரவர்த்தி தலைமையில் கணபதி ஹோமம் சாஸ்தா ஹோமம் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து ஒன்பது முப்பது மணிக்கு அனைத்து குருசாமிகள் முன்னிலையில் அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 2000 பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நான்கு ரத வீதிகளில் ஐயப்பன் ஊர்வலமாக வந்தார். ஆங்காங்கே பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி ஐயப்பனின் அருளை பெற்றனர். இரவு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.