தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி டிக்ககெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – 12 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் பணம் பறிமுதல்.
நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, லிங்கம்பட்டி புதுகாலனி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணி லூர்துசாமி (59) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்தோணி லூர்துசாமியை கைது செய்து அவரிடமிருந்த 12 வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 8,900/- பணத்தையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.