
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் ஆலந்துறை காவல் நிலைய காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நரசிபுரம் ஆலமரம் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் (30) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
