
ஆண்டு தோறும் மேமாதம் 31″ம் தேதி உலக புகையிலைப் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பாக கோவை, பந்தயசாலை பகுதியில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் பந்தயசாலை காவல்நிலைய ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்கள், பதாதைகளை ஏந்தி ஊர்வலமாகவும், சைக்கிளிலும் சென்றனர். இப்பேரணியின் வாயிலாக புகையிலை பயன்பாட்டின் தீங்குகள் குறித்த முக்கிய கூறுகள் எடுத்துக்கூற பட்டது.
விழிப்புணர்வு பேரணியில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார், மற்றும் எஸ்என்ஆர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை முதல்வர் தீபானந்தன், உள்ளிட்ட ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
