• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாநாடு படத்தை பாராட்டிய மலையாள பட இயக்குநர்

சிலம்பரசன் நடிப்பில் மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பரில் வெளியாகி திரையரங்கில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் நேரம், பிரேமம் படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் மாநாடு படம் தொடர்பாக தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் ”மாநாடு படம் பார்த்தேன். மன்மதன் படத்தைப் போல இந்தப் படத்தில் சிம்பு சிறப்பாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா தனது இயக்கத்தைப் போல நடிப்பிலும் கலக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை சண்டைக் காட்சிகள், படத்தொகுப்பு, இயக்கம் என அனைத்தும் நன்றாக இருந்தது. வெங்கட் பிரபு, யுவன்…. நிமிர்ந்து நில் துணிந்து செல் பாடல் என்னை பல்வேறு தருணங்களில் நம்பிக்கையளித்தது. அதற்காக உங்களுக்கு பதிலுக்கு நான் என்ன செய்யப்போகிறேன் என்பது தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.