தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகர்களாக வலம் வருபவர்களில் மிக முக்கியமானவர் எஸ்.ஜெ.சூர்யா. சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி அஜித்குமார் விஜய்யை வைத்து வாலி, குஷி என இரு மெகாஹிட் படங்களின் மூலம் முன்னணி இயக்குனரானார் எஸ்.ஜெ.சூர்யா.இவர் இயக்கிய இப்படங்கள் அஜித், விஜய் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் நடிகராகவேண்டும் என்று தீவிரமாக இறங்கிய எஸ்.ஜே.சூர்யா நியூ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த இப்படத்திற்கு A .R ரஹ்மான் இசையமைத்திருந்தார். பின்பு அன்பே ஆருயிரே, வியாபாரி, கள்வனின் காதலி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.
இருந்தாலும் 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி திரைப்படம் எஸ்.ஜெ.சூர்யாவிற்கு நடிகராக பெரும் திருப்புமுனையாக அமைந்தது.அதன் பின் ஸ்பைடர், மெர்சல் என்னும் படங்கள் இவரை வில்லனாக குறிப்பாக நடிகனாக அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்சென்றதுஇந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த மாநாடு இவர் திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது.
தனுஷ்கோடி என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்.ஜெ சூர்யாவின் அக்கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.தற்போது இவர் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன்இயக்கத்தில் உருவாகவுள்ள மார்க் ஆண்டனிபடத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கதையை கேட்டு அசந்துபோய் இவர் போட்ட ட்வீட் வைரலானது. இந்நிலையில் இவர் இப்படத்தின் கதையை எவ்வாறு கேட்டார் எனும் சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரனிடம்படத்தின் கதையை கிட்டத்தட்ட பத்து மணிநேரம் கேட்டிருக்கிறார் எஸ்.ஜெ.சூர்யா. பொதுவாக கதைக்கேட்பதில் அதிகஆர்வம் கொண்ட எஸ்.ஜெ.சூர்யா தான் நடிக்கும் படங்களின் முழு கதையையும் கேட்பாராம். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவத்தையும் கதையின் போக்கையும் அலசி ஆராய்ந்து கதைக்கேட்கும் எஸ்.ஜெ.சூர்யா கதையைமட்டும் பத்து மணிநேரம் கேட்டாராம்.