தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமானவர் ம. சிங்காரவேலர். மலையபுரம் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி என அறியப்படுகிறார். சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள அயோத்திகுப்பத்தில் பிறந்தார். தன் பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன் பிறகு சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் இவருக்குப் புலமை வாய்ந்தவர். சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907 ஆம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எந்தவொரு சூழ்நிலையிலும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சென்னயில் நடந்த வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு, சைமன் குழு புறக்கணிப்பு , தொழிலார்கள் போராட்டம் ,பின்னி கர்நாடிக்க ஆலைப் போராட்டம், நாகை தொடர்வண்டித் தொழிலாளர்கள் போராட்டம் முதலியன இவர் தலைமையிலேயே நடந்தது. மே 1 ஆம் தேதி தொழிலாளர் நாள் ஆசியாவில் முதல் முதலில் சென்னையில் இவரால் தான் கொண்டாடப்பட்டது என்பதற்கு சான்று உண்டு. அப்படி பல நல் விஷயங்களை இவரின் வாழ்வில் பொதித்து சென்றுள்ளார்.சிறந்த வழக்கறிஞரான மலையபுரம் சிங்காரவேலு பிறந்த தினம் இன்று..!