• Wed. Mar 22nd, 2023

#BREAKING உள்ளாட்சி தேர்தல்.. மக்கள் நீதி மய்யம் எடுத்த அதிரடி முடிவு!

Kamal Hassan

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மையம் கட்சி மாநில நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் 20 பெண்கள் உள்பட 60 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது தொடர்பாக மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுவது உறுதி என அறிவித்துள்ள கமல் ஹாசன், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *