சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 14 ஆயிரம் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பணிகளை தொல்லியல் ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞரும், தமிழக அரசின் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் உறுப்பினருமான பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜன் கீழடி அகழ்வாய்வு தளத்தை பார்வையிட்டார். அப்போது அகழாய்வு தளத்தில் மகிழ்ச்சியுடன் பரதநாட்டியம் ஆடி கீழடியின் பெருமைகளை தனது பாரத அசைவுகள் மற்றும் முகபாவனைகளால் அழகாக எடுத்துக்காட்டிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.