தென் மாவட்டத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழாவிற்கான கொடியேற்றம் சர்ச் வளாக முன்பு நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி மதுரை பிஷப் அந்தோணி சவரிமுத்து கொடியேற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டு ஆரோக்கிய அன்னையை வழிபட்டு சென்றனர். செப்டம்பர்.,8ம் தேதி அன்னையின் பிறப்பு, இறைவார்த்தை எஸ்.வி.டி.,சபையின் ஆண்டு விழா, அற்புத ஜீவ ஊற்று ‘இயேசுவின் அருமருந்து’ ஆண்டு விழா என முப்பெரும் விழா, கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆராதனை, அன்னையின் அலங்கார தேர் பவனியுடன் நடக்கிறது.

செப்டம்பர்.9ல் கொடி இறக்கம், நன்றி திருப்பலி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை எஸ்.வி.டி., அதிபர்கள், நிர்வாகிகள், பங்குத்தந்தை உதவி பங்குதந்தை மற்றும் இருபால் துறவியர் செய்து வருகின்றனர்.




