• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்

Byp Kumar

Mar 26, 2023

மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரையில் எம்ஜிஆர் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள தனியார் அரங்கத்தில் மக்கள் தேசம் கட்சியின் அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவையின்கட்சியின் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு மற்றும் வளர்ச்சி குறித்து மாநில மாவட்ட ஒன்றியம் நகர நிர்வாகிகள்செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையிலும் பொதுச் செயலாளர் வேதமணி பறையர் தலமை நிலை செயலாளர் திருமுருகன் மாநில செயலாளர் குருவிஜய் பறையர் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் இளஞ்சேகரன்,மதுரை மாவட்ட செயலாளர் சேவியர்இருதயராஜ் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி செய்தியாளர்களிடம் கூறியது கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் விதமாக மாநில மாவட்டம் ஒன்றியம் நகரம் கிளைக்கழகம் நிர்வாகத்தை பலப்படுத்த நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினைசிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் ஜூலை 7ஆம் தேதி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவினை தென் மாவட்டத்தில் மாநாடு போல் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பேரணியை நடத்த வேண்டும்என செயல்வீரர் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது எனக் கூறினார்