

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆ,லியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். 550 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இந்த படம் மார்ச் 25ம் தேதியான நேற்று ரிலீசாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஆர்ஆர்ஆர் படம் பார்த்து விட்டு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். ராஜமெளலியை இணையாக பிரம்மாண்ட இயக்குனர் என புகழப்படும் டைரக்டர் ஷங்கரும் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து விட்டு, சோஷியல் மீடியாவில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில், அட்டகாசமான, அசத்தலான, வலுவானது. இந்த கர்ஜனை எப்போதும் எதிரொலிக்கும். இப்படி ஒரு ஒப்பிட்டு பார்க்க முடியாத அற்புதமான உணர்வை தந்த ஒட்டுமொத்த டீமுக்கும் நன்றி. ராம் சரணின் அசத்தலான நடிப்பு, திரையை விட்டு கண்ணை நகர விடவில்லை. அனல் பறக்கும் பீம் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார். உங்களின் கற்பனையை யாராலும் அடிச்சுக்க முடியாது. பாராட்டுக்கள் “மகாராஜா” மெளலி என குறிப்பிட்டுள்ளார்.
