கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கும் இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றி இருக்கின்றது.
இந்த படத்தில், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்தியின் பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களின் ரிலிஸுக்கு பின் சர்தார் வெளியாகின்றது.
இந்நிலையில் பழைய நடிகை லைலா இந்த படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!