மஹா சிவ ராத்திரி விழா முன்னிட்டு விருதுநகரில் உள்ள வாழ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழா இனிதே துவங்கியது.

காலையில் மங்கள இசையுடன் துவங்கி பின்பு அமுதசுரபி இன்னிசை குழு சார்பாக பக்தி இசை பாடினார்கள். தொடர்ச்சியாக மாணவி தேஜஸ்வி நாட்டியஞ்சலி, மஹா சிவ சக்தி இசையாஞ்சலி (வீணை) நடைபெற்றது. மஹா சிவ ராத்திரி விழா காண வந்த பக்த கோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







