• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா…

ByKalamegam Viswanathan

Feb 17, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா சிவராத்திரி விழா மூன்று நாட்கள் நடைபெற்றது

நேற்று முன் தினம் இரவு வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ அதிர் வேட்டுக்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது அப்போது வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் வேப்பை இலை கலந்த நீரை சாமியாடிகள் பாதத்தில் ஊற்றி தங்களது வேண்டுதல் குறித்து வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து திருக்கோவிலை அடைந்த பெட்டி வைக்கப்பட்ட ஆபரணங்கள் மூலம் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

பின்பு கருப்பசாமி அக்கினிவீரன் நொண்டி சாமி பேச்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து நேற்று சக்தி கிடா வெட்டப்பட்டு கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது கோவில் பங்காளிகள் சாமியாடி ஊர்வலமாக வந்தனர். இதில் மேலக்கால் பன்னியான் விக்கிரமங்கலம் செக்கானூரணி உசிலம்பட்டி
பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.