• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சி புதுக்கண்மாய் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மங்கள இசை உடன் கணபதி பூஜை தொடங்கி மகா பூர்ணா ஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சியை நடத்தினர்.

திங்கட்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடு ஆகி அதிர்வேட்டுகள் மேளதாளம் முழங்க திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து விநாயகர் துர்க்கை தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விநாயக பெருமானுக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை சமயநல்லூர் ஊராட்சி புதுக்கண்மாய் கிராமத்தினர் செய்திருந்தனர்.