

மதுரையில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகம், கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவத்திற்கு வந்த கரிமேடு போலீசார் இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தி பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்த நபர் வகையாற்று பகுதியில் நேற்று இரவு மது அருந்துவதற்காக வந்திருக்கலாம் எனவும் அங்கு சில மர்ம நபர்களுடன் ஏற்பட்ட தகராறு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது நிலையில் போலீசார் விசாரணையை துரிதிபடுத்தி உள்ளனர்.

