மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், அரசு பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பதையும், பாதுகாப்பான பேருந்து இயக்கம் தொடர்பான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பேருந்து ஓட்டும் நேரத்தில் கவனச்சிதறலை ஏற்படுத்தும் செல்போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பயணிகளின் பாதுகாப்பே முதன்மை என்ற அடிப்படையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, பொறுப்புடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உறுதி மொழி அரசு பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களால் எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பான பேருந்து இயக்கம், விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் போக்குவரத்து சட்டங்கள் குறித்து விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொது மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.





