• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதல்வருக்கு எதிராக இந்து அமைப்பினர் நூதன முறையில் போராட்டம்!

By

Sep 7, 2021 ,
Temple

மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், அதன் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொரோனாவை காரணம் காட்டி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் மூடி, பக்தர்களை அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் தினந்தோறும் இந்து ஆலயங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அஞ்சல் அட்டைகளை தமிழக முதல்வருக்கு அனுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.