இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்க மதுரையில் இருந்து 21 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் பளுத்துக்குதல், சிலம்பம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் 16 மாணவிகள் தங்க பதக்கமும், 3 மாணவர்கள் தங்க பதக்கமும், 5 மாணவிகள் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். மதுரை தனியார் கல்லூரியை சேர்ந்த சினேகா, சிவசக்தியா, ஹரிணி மற்றும் பூஜா ஆகிய மாணவிகள் பளுத்துக்கு போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளனர். தொடர்ந்து தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் அர்ச்சனா, சிவரஞ்சனி, ஐஸ்வரியா, ஜனனி யோகராஜ் பளுத்துக்கு போட்டியில் தங்கமும், லோஹிதா வெள்ளியும் வென்றுள்னர். மேலும் தடகள போட்டிகளில் பங்கேற்ற அக்ஷயா, அட்ச்சயா, லத்திகா சாரா, பிரதிக்ஷா, மோனாஜா, ஆர்த்தி குவர் தங்கமும் சிவ வர்ஷினி, சுறக் ஷா பாய் ஆகியோர் வெள்ளியும் வென்றுள்ளனர். சிலம்பம் போட்டியில் ஸ்வேதா ,கல்லூரி மாணவன் வசந்த் கிஷோர், யோகபிரகதீஸ் தங்கம் வென்றுள்ளார்.
வெற்றி வாகை சூடி மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரவாரமாக வரவேற்று இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.