• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு தொடங்கும்- தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

Byp Kumar

Dec 8, 2022

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ரூபாய் 440 கோடி செலவில் நடைபெற்று வரும் மதுரை ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு செய்தார். மறு சீரமைப்பு பணிக்கான விளக்கப் படங்களை பார்வையிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


இந்த ஆய்வில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் நந்தகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேசும்போது,
மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் 36 மாதங்களில் நிறைவடையும், அதற்கான பணிகள் 2&3 மாதங்களில் நிறைவடையும் எனவும், பழமை மாறாமல் ரயில் நிலையம் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.மதுரை ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்காமல் தவிர்க்க மதுரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.