• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு – போலீசார் விசாரணை

Byகுமார்

Jul 7, 2022

மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்மான முறையில் இறந்து கிடந்தார் . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் பிலாவநத்ததை சேர்ந்தவர் தர்மராஜ் வயது 54 என்பவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை விடுதியின் வரவேற்பாளர் அறையில் கழுத்தில் கீரலுடன் சந்தேகக்கும்படி இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தர்மராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் தர்மராஜ் இறப்பு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன.