மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அதே நவீன மற்றும் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது

150 கோடி ரூபாய் செலவில் 70 உள்நயாளிகள் மற்றும் ஹீமோதெரபி நியூக்ளியர் ஸ்கேன் வசதிகளுடன் தென் மாவட்டங்களில் முதல் முறையாக மதுரையில் துவக்கப்பட்டுள்ளது
வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் விவேகானந்த முதல்வர் திருநாவுக்கரசு புற்றுநோய் சிகிட்சை மைய இயக்குனர் வெங்கடாஜலபதி மற்றும் சிறப்பு விருந்தினராகபுற்றுநோய் சிறப்பு நிபுணரும் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் விஜய் ஆனந்த் ரெட்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் விஜய் ஆனந்த் ரெட்டி கூறுகையில்
புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், கீமோதெரபி, நியூக்ளியர் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட நவீன மருத்துவ முறைகள் புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தற்போது புற்றுநோய் எந்த நிலையில் இருந்தாலும், நோயின் தன்மை மற்றும் பாதிப்பின் அளவைப் பொறுத்து உரிய நவீன சிகிச்சைகள் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவப் பலன் அளிக்க முடிகிறது. குறிப்பாக, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், உரிய மருந்துகள், சிகிச்சை முறைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த மருத்துவ ஆலோசனைகள் மூலம் சிறப்பான சிகிச்சை அளித்து குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மூலம் புற்றுநோய் சிகிச்சை பெறுவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அந்த வகையில், மதுரை வேலம்மாள் புற்றுநோய் மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன மருத்துவ வசதிகளுடன் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக 70 படுக்கை வசதிகளும், கீமோதெரபி சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்காக 30 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், அதி நவீன நியூக்ளியர் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும் நோயாளிகளின் கண்காணிப்பு மற்றும் மருத்துவப் பராமரிப்புக்காக ‘அப்சர்வேஷன்’ எனப்படும் தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் சிறப்பான மருத்துவ வழிகாட்டுதலுடன் புற்று நோயாளிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் நிறைந்த தரமான உயர்தர சிகிச்சை வழங்கவும் குறைவான கட்டணத்தில் பயனுறும் வகையில் வேலம்மாள் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.