மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை காந்தி மியூசியத்தின் 65வது ஆண்டு தொடக்க விழா மியூசியத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஸ்தி பீடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி சர்வ சமய பிரார்த்தனை நடத்தப்பட்டது. மியூசிய பொருளாளர் செந்தில்குமார், காப்பாட்சியர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் மணிகண்டன் மரக்கன்று வழங்கினார்.
மதுரை காந்தி மியூசியத்தின் 65வது ஆண்டு தொடக்க விழா..!
