• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் : கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்

மதுரை புதுநத்தம் சாலையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து சென்னை செல்லும் தூரத்தைக் குறைக்க, மதுரை – செட்டிக்குளம் இடையே 7.3 கி.மீ. தொலைவுக்கு ரூ.694 கோடியில் புதிதாக பிரமாண்ட பறக்கும் பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த மேம்பாலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி எதிர்பாராத விதமாக இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஆகாஷ் சிங் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விபத்து ஏற்பட்ட பகுதியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், மதுரை மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக கட்டுமான நிறுவனத்துக்கு நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஜே.எம்.சி. கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.3 கோடியும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்துக்கு ரூ.40 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 80 கட்டுமான பணி முடிந்த நிலையில் மேம்பாலம் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.