• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மலர்சந்தை மீண்டும் பழைய இடத்திலயே செயல்பட விரைவில் அனுமதி! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Byகுமார்

Sep 28, 2021

மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டுவந்த மதுரை மலர்சந்தையில் போதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறி கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தற்காலிக மலர்சந்தை மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்துநிலையத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 50நாட்களாக ஆம்னி பேருந்துநிலையத்தில் மலர்சந்தையில் செயல்பட்டுவந்த நிலையில் போதிய வசதி்இல்லாத நிலையில் மீண்டும் பழைய இடத்திற்கு மலர்சந்தையை செயல்பட அனுமதி வேண்டும் என வியாபாரிகளும், விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் இன்று மலர் வியாபாரிகள் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து சந்தை இடமாற்றம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது விரைவில் மலர்சந்தை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மலர்சந்தை சங்க நிர்வாகி ஏ.வி.பிரபாகரன் பேசியபோது :

மதுரை ஆம்னி பேருந்துநிலையத்தில் தற்காலிக மலர்சந்தை செயல்படுவதால் வியாபாரிகளும், விவசாயிகளும் போதிய வசதி இல்லாமல் இருந்ததோடு வியாபாரமும் குறைவாக வந்தது எனவே மாவட்ட ஆட்சியர் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் விரைவில் மலர்சந்தையை மீண்டும் சென்ட்ரல் மார்க்கெட் பகுதியிலயே செயல்படுத்த அனுமதி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்தனர்.