• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகராட்சி சமுதாய கூடம் மேயர் இந்திராணி பொன்வசந்த்,திறந்து வைக்கப்பட்டது

ByKalamegam Viswanathan

Apr 26, 2023

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.30 மதிச்சியம் பகுதியில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.


மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மண்டலம் 4 வார்டு 30 மதிச்சியம் வைகை வடகரை கிழக்கு தெருவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் 2022-2023 ஆம் ஆண்டின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.41.60 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையினரால், புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த சமுதாய கூடத்தில், மதிச்சியம் பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், திருமணம் சடங்குகள், காதணி விழா மற்றும் இதர சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கூடத்தில் சுமார் 200 நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் பெரிய அறைகள், குடிநீர் வசதி ,கழிப்பறை வசதி, மின்விளக்குகள், பேவர் பிளாக் சாலை மற்றும் சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ,மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா உதவி ஆணையாளர் திருமலை, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் சந்தனம், சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், மாமன்ற உறுப்பினர் வசந்தாதேவி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்