மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தில் ஒளிந்து கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு உள்ளதால் அவற்றிக்கிடையே சில பாம்புகள் இருந்துள்ளன. இதனை கண்ட சிலர் சத்தமிடவே அச்சமடைந்த பாம்பு அங்கிருந்த பெண் வழக்கறிஞரின் ஸ்கூட்டியில் மலமலவென ஏறி ஒளிந்து கொண்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தை கொண்டு சென்று அங்கு வாகனத்தில் பாகங்கள் அப்புறப்படுத்தி ஒளிந்து இருந்த சுமார் இரண்டரை அடி (2 1/2 அடி) கொம்பேறி மூக்கன் பாம்பை லாபகமாக பிடித்த தீயணைப்பு துறையினர் வனத்துறையுடன் ஒப்படைத்தனர். பிடிபட்ட பாம்பு குட்டி என்பதால் அவற்றுடன் ஆன மற்ற பாம்புகளையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்பு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.