• Mon. Dec 9th, 2024

விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் -மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி

ByKalamegam Viswanathan

Feb 8, 2023

விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி
மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும், தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி ஆழமாக காலுன்றி இருக்கிறது, விக்டோரியா கவுரி நீதிபதியாக அறிவிக்கப்பட்டது மதச்சார்பின்மைக்கு எதிரானது, விக்டோரியா கவுரியை திரும்ப பெற வேண்டும் மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியோர் குடியரசு தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வலியுறுத்தி உள்ளோம், விக்டோரியா கவுரி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்தவர்., விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்க தகுதியற்றவர், விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், கலைஞரின் சங்கத் தமிழ், காவியத்தின் அடையாளம் பேனா, பட்டேல் சிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், பேனா நினைவுச் சின்னத்தால் சுற்றுசூழல் பாதிக்காது, பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக பிரச்சாரம் தேவையற்றது” என கூறினார்..