• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

நடிகர் விஜய் வரவேற்பு நிகழ்ச்சியால் கலவர பூமி போல் காணப்பட்ட மதுரை விமான நிலையம்…

ByKalamegam Viswanathan

May 1, 2025

நடிகர் விஜய் வரவேற்பு நிகழ்ச்சியால் மதுரை விமான நிலையம் கலவர பூமி போல் காணப்பட்டது. காவல்துறை கட்டுப்பாட்டுகளை மீறிய தொண்டர்கள்.., தொண்டர்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக வெற்றிக் கழக தலைமை…

மதுரை விமான நிலைய தடுப்பு வேலைகளை சேதப்படுத்திய த.வெ.கழக நிர்வாகிகள் மீது புகார் கொடுக்க தயங்கும் மதுரை விமான நிலைய நிர்வாகம்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

விஜயை காண ஆர்வம் மிகுதியில் காலை 6 மணி முதலே காத்திருந்த ரசிகர்கள் விஜய் வந்த வேனை முற்றுகையிட்டனர். இதனால் விஜய் பயணம் செய்யும் வேன் முன்னே செல்ல மிகவும் சிரமப்பட்டது. இதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் விமான நிலையத்தில் பல ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டம் நெருக்கடியில் செருப்புகளை கலைந்து ஓடினர்.

இதே போல் விமான நிலைய வெளிவளாகம் பிரிவு அருகே விஜய் ரசிகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விஜயை காண ரசிகர்கள் முன்பகுதிக்கு வந்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு விமான நிலைய தடுப்பு வேலிகளை ரசிகர்கள் நொறுக்கி தள்ளினர். மேலும், தள்ளு, முள்ளு ஏற்பட்டதில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி செருப்புகளை தவிர்த்து ஓடினர்.

தொண்டர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் விஜய் கைகளை ஆட்டி சென்று விட்டார். காலை 5 மணி முதல் விமான நிலையத்தை முற்றுகையிட்ட ரசிகர்களால் இருபுறம் வாகனங்கள் , கார், பைக்கை நிறுத்தி போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காலை 9 மணி முதல் 11 மணி வரை அவர்களை வெளியேற்றுவதில் மிகவும் சிரமப்பட்டனர்.

பின்னர் மீண்டும் 12 மணி முதல் ரசிகர்கள் விமான நிலைய வருகை பகுதிகுள்ளும் மற்றும் வெளிவளாக பகுதிகளில் கூடினர் 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் மிகவும் திணறினர்.

விமான நிலையம் வந்தடைந்த ரசிகர்களை கட்டுப்படுத்த இரண்டாம் கட்ட தலைவர்கள் கிடையாது .மேலும் கூட்டத்தில் வேனில் இருந்து கைகாட்டிய விஜய்யும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தொண்டர்களை அமைதியாகவும் ஒழுங்குபடுத்தவும் முடியாமல் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது நல்வேலையாக விபத்து உயிர் சேதம் ஏற்படாத வகையில் சென்றது என போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

விஜய்யின் பாதுகாப்பு பணிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் சேர்ந்த ஜெண்டர் என்ற நிறுவனத்தின் சார்பில் சாஜு என்பவர் தலைமையில் 37 தனியார் பாதுகாப்பு வீரர்கள் (பவுன் சர்கள்)பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றி கழக ரசிகர்கள், தொண்டர்கள் ஆர்வமிகுதியால் பவுன்சர்களை நெருக்கி திணறடித்தனர். ஆனால் விஜய் ரசிகர்களின் முற்றுகையை தாங்க முடியாமல் பவுன்ஸர்கள் விலகித்தான் ஓடினர்.

விமான நிலைய வரவேற்பு பகுதியில் பாதுகாப்புக்கு போட்டிருந்த பிளாஸ்டிக் தடுப்பு வேலிகளை தூர எறிந்தனர். அதேபோல் விமான நிலைய வெளி வளாகத்தில் உள்ள விமான நிலைய விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்த தடுப்பு பலகை பிய்த்து தள்ளினர் இதனால் கலவரம் ஏற்பட்டது போல் ஆங்காங்கே குவியல் குவியலாக செருப்புகள் காணப்பட்டது.

பெரும் கலவரம் ஏற்பட்டது போல் விமான நிலைய உள் மற்றும் வெளிவளாகம் காட்சியளித்தது. விமான நிலைமத்தில் வரவேற்க திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் நான் விஜயோ கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாத விஜய் அரசியலில் என்ன சாதிக்கப் போகிறார் என்ற பொது மக்களின் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் தள்ளு முள்ளு வரவேற்பு பின் நடிகர் விஜய் கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார்.