• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை ஆதீனத்திற்கு, வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு மிரட்டல்..,

ByKalamegam Viswanathan

Oct 4, 2024

மதுரையில் வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு மதுரை ஆதீனத்திற்கு நேரில் வந்து மிரட்டல். இவர்களைப் போன்றவர்களுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என மதுரை ஆதீனம் பேட்டியில் தெரிவித்தார்.

மதுரையில் அடையாளமாக இருக்கக்கூடிய வைகை நதியை சீரமைக்க பணி முடியும் வரை நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு மூன்று நபர்கள் நேற்று மாலை ஆதின மடத்திற்கு வந்து மிரட்டல் கொடுத்ததாக கூறப்படும் நிலையில், பணம் தர மறுத்து ஆதினத்தை தரக்குறைவாக பேசியதாக மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து மதுரை ஆதினம் பேசும்போது..,

வைகை நதியை சுத்தம் செய்வது மிகப்பெரிய பணி, அதை அரசாங்கமே செய்ய முடியும், மற்றவர்களால் எப்படி செய்ய முடியும். எனவே பணம் கேட்டு வந்தவர்களை அனுப்பி விட்டதாகவும், மிரட்டல் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க விரும்பவில்லை என ஆதீனம் கூறினார். அரசு இதுபோன்ற வைகை நதியை சுத்தம் செய்வதில் தலையிட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் துணை முதல்வராக பதவியேற்று இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து நடிகர்கள் குறித்து பேச மாட்டேன் என்று தெரிவித்தார்.