• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

BySeenu

Mar 28, 2024

ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக – கோவையில் நீலாம்பூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கணேச மூர்த்தி.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி. ஆக இருந்து வருகிறார்.தற்போது தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அக்கட்சி சார்பில் துரை வைகா போட்டியிடுகிறார்.இந்த நிலையில் கணேச மூர்த்தி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அவர் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.இதற்கிடையில் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தியும் பரவியது.

இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ம.தி.மு.க. உருவானதில் இருந்து கணேச மூர்த்தி அக்கட்சியில் உள்ளார்.2016″ஆம் ஆண்டு இவர் கட்சியின் பொருளாளராக வைகோவால் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.