தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனி ஆண்டவர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா நடந்தது. கோமாதா பூஜை உடன் துவங்கிய தைப்பூச விழாவானது பக்தர்கள் காவடி எடுத்தும் தீர்த்த குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர் பின்னர் காவடி பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதனை தொடர்ந்து கோவில் குருக்கள் பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தைப்பூச திருநாளில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து தங்கத்தேர் திருவீதி உலா கோவிலை சுற்றி வந்தடைந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோசங்கள் முழங்க தங்க தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதே போல சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஞான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஞான சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு உற்சவ கோலத்தில் அருள் பாலித்தார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.