• Wed. Feb 19th, 2025

பொறியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து

Byவிஷா

May 10, 2024

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதியன்று நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணையை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மே 15ம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15ம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான பிறகு ஜூன் 6-ம் தேதியன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.