மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பல சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சமீபத்தில் கூட மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் வார்டு பகுதிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சங்கரபாண்டியன் என்பவர் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது கொடுக்க கூடாது என்று, குழந்தைகள் விளையாடும் டம்மி பணத்தினை கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதே போல மதுரை மாநகராட்சி வார்டு 62ல் மநீம சார்பில் போட்டியிடும் பாட்ஷா என்பவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் வந்து மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனந்த ஜோதி படத்தில் தனது பணிகளை தொடருமாறு கமலுக்கு எம்.ஜி.ஆர் சொன்னதால் இந்த வேடத்தில் வந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஓட்டு கேட்கும் போது எம்ஜிஆர் போல பேசிவிட்டு வெற்றி பெற்றதும் நம்பியார் போல நடந்துகொள்ளாமல் இருந்தால் நல்லது என பொதுமக்கள் கூறுகின்றனர்.