• Sat. Apr 27th, 2024

இவர் தமிழக ஆளுநரா? பாஜக தலைவரா? வெளுத்து வாங்கிய ஜெய் பீம் சந்துரு

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு காணல் நீராகிவிட்டது எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க அரசு வலியுறுத்தி வந்தது.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து விதமான போராட்டங்களையும் நடத்திவந்த திமுக ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வுகளை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து, ஆட்சிக்கு வந்தவுடன் ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆராய்ந்தது.

இக்குழுவின் பரிந்துரைகளையேற்று, முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாஜகவை தவிரஅனைவரின் ஆதரவோடும்சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேறியது.

பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 27 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து நீட் விலக்கு தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநருக்கு தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விளக்கு சட்ட மசோதாவை மீண்டும் சபாநாயகருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் மாநில ஆளுநர் ஆர்.என் ரவி. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மற்றும் இது தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்த ஆளுநர், “அந்த மசோதா மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கருத்தை கொண்டிருக்கிறார்.

குறிப்பாக மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு அது எதிரானது என ஆளுநர் கருதுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தலைவர்களும், இயக்கங்களும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு “ தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா? என முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *