• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவு

ByKalamegam Viswanathan

May 28, 2023

உலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜயின் அறிவுறுத்தலின்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு சேவையகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைமை சார்பில் திருப்பரங்குன்றம் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் அன்றாட உணவிற்காக தவிக்கும் மக்கள் இருக்கும் இடம் சென்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆயிரம் பேருக்கு மாபெரும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கம் மதுரை தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் மருதுபாண்டியன் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி தொண்டரணி தலைவர் தளபதி நசீர் ஏற்பாட்டில் 20-க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.