• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வரத்து குறைவு எதிரொலி …ரூ.140 க்கு விற்பனையாகும் கேரட்

ByA.Tamilselvan

Sep 28, 2022

வரத்து குறைவால் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் கேரட் விலை. தமிழக முழவதும் ரூ100 முதல் 140க்கு விற்கப்படுகிறது.
கேரட் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உச்சத்திலேயே நீடித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ கேரட் ரக வாரியாக ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்வதை பார்க்க முடிகிறது. விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கேரட் விலை அதிகரித்து இருப்பதாகவும், இன்னும் 15 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.