• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போலீசாரை மிரள வைத்த காதல் மன்னன் காசி..!

ByA.Tamilselvan

Jun 30, 2022

ஆபாச வீடியோக்கள்.. நிர்வாண போட்டோக்கள்.. என போலீசாரை மிரள வைத்துள்ளான் கன்னியாகுமரியை சேர்ந்த காதல்மன்னன் காசி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி (26). பெண் டாக்டர் உட்பட ஏராளமான பெண்களுடன் ஃபேஸ்புக் மூலம் நெருக்கமாக பழகியுள்ளார்.
பின்னர் அந்த பெண்களுக்கு காதல் வலை வீசி உள்ளார். இதில் சிக்கும் பெண்களை தனியாக வரச்சொல்லி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருந்தார்.இதையடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக காசி மிரட்டியுள்ளார். இவ்வாறு மிரட்டி மிரட்டியே அந்த பெண்களை மீண்டும் மீண்டும் தன்னுடைய பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார்.
மீண்டும் பாலியல் இச்சைக்கு இணங்காத பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலையும் காசி செய்ததாக பெண் ஒருவர் புகார் செய்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் காசி குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் சென்றது.
இந்த நிலையில், காசியின் லேப்டாப்பில் அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருப்பதை அறிந்த அவரது தந்தை தங்கபாண்டியன் அவற்றை அழிக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மூன்றாவது முறையும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் தான் காசியின் தந்தை என்பதை தவிர அந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் 395 நாட்களாக சிறையிலிருந்ததால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில் 4வது முறையாக கன்னியாகுமரி நீதிமன்றத்தில் தங்கபாண்டியன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது காசி, அவரை கைது செய்வதற்கு முன்பு வரை 120 பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றியுள்ளார்.மேலும் அவரது தந்தை அழிக்க முயற்சித்த லேப்டாப்பில் 400 ஆபாச வீடியோக்களும், 1900 ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, தங்கபாண்டியன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.